புயல் பற்றி சமூக வலைதளங்களில் பீதியை கிளப்பினால் கடும் நடவடிக்கை: உதயகுமார் எச்சரிக்கை

புயல் பற்றி சமூக வலைதளங்களில் பீதியை கிளப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on

குமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நாகர் கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு சேத மதிப்பீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விஜயகுமார் எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வெள்ள பாதிப்பு பற்றி அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-

புயலால் சேத மதிப்பீடு குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு தேவையான பேரிடர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அதற்காக 10 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பாதிப்புகள் குறித்து தகவல்களை தெரிவிக்ககட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம். பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com