இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்: மந்திரி ஸ்ரீராமுலு நம்பிக்கை

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
மந்திரி ஸ்ரீராமுலு
மந்திரி ஸ்ரீராமுலு
Published on

பல்லாரி :

சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிரா தொகுதி பொறுப்பை எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சென்ற இடத்தில் பா.ஜனதாவுக்கு தோல்வி இல்லை. சிரா தொகுதி மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பார்கள். இதற்கு முன்பு கே.ஆர்.பேட்டையில் நடைபெற்ற தேர்தலிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. அங்கும் விஜயேந்திரா தான் பொறுப்பை ஏற்று தேர்தல் பணியாற்றினார். இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

ஆர்.ஆர்.நகரில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு டி.கே.சிவக்குமார் பொருத்தமானவரா? என்ற கேள்வி எழும். முதல்-மந்திரி ஆகும் கனவில் உள்ள டி.கே.சிவக்குமார், ஒருமையில் பேசுகிறார். அவர் எப்படி முதல்-மந்திரி பதவியை நிர்வகிப்பார்.

இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com