கோவில்களில் தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைப்பு - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
கோவில்களில் தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைப்பு - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
Published on

திருமலை:

மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

இதையடுத்து, கோவில் வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழியில் ஆட்சி தொடர்ந்து சிறப்பாக நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டி கொண்டேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் உள்பட தமிழகத்தில் கோவில்களில் நடந்த தீ விபத்தை ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பிறகு, தீ விபத்து குறித்த குழுக்களின் பரிந்துரையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com