இதுவரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார்- மு.க.ஸ்டாலினை கிண்டல் செய்த அமைச்சர்

ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லிவிட்டதாக அமைச்சர் உதயகுமார் கிண்டலாக கூறினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது பிரச்சார உரையில் ஆட்சி மாற்றம் வரும் என தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆட்சி மாற்றம் எனும் பலாப்பழத்தை காட்டி தொண்டர்களை ஸ்டாலின் வழிநடத்துகிறார். ஆனால், என்றைக்கும் அந்த பலாப்பழம் அவருக்கு கிடைக்காது. இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் ஸ்டாலின். இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு ஸ்டாலின் வர மாட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com