திமுக எம்.பி.க்கள் 38 பேரால் 38 பைசாவுக்கு கூட பயன் இல்லை - அமைச்சர் கே.சி. கருப்பணன்

தி.மு.க. கட்சி 38 எம்.பி.க்களை பெற்று என்ன பிரயோஜனம்? 38 பைசாவுக்கு கூட பயன் இல்லை என அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.
அமைச்சர் கே.சி. கருப்பணன்
அமைச்சர் கே.சி. கருப்பணன்
Published on

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை நடத்த தயங்குகிறார்கள் என்கிறார்கள். நாங்கள் தயங்கவும் இல்லை. பயப்படவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கேட்டு தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. அதை அவர்களை திரும்ப பெறச் சொல்லுங்கள் வரும் டிசம்பர் மாதம் தேர்தலை நடத்த இந்த அரசு தயாராக உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொய் பேசுவதற்காகவே வாய் திறக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் கூட இப்படி பொய்யான வாக்குறுதிகளை கூறி 38 எம்.பிக்களை பெற்று உள்ளார்.

ஆனால் இந்த 38 எம்.பி.க்களை பெற்று என்ன பிரயோஜனம்? 38 பைசாவுக்கு கூட பயன் இல்லை.

மு.க.ஸ்டாலின் எப்படியும் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என கணவு கண்டு கொண்டிருக்கிறார். ஆனால் அவரது கனவு கனவாகத்தான் இருக்கும் ஒரு போதும் தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பே கிடையாது. மக்கள் அந்த வாய்ப்பை கொடுக்கவும் மாட்டார்கள்.

பால் விலை உயர்வு பற்றி முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கை மிகவும் சரியான நடவடிக்கை தான்.

ஊட்டியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களால் தான் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளதாக கூறுவது சரியில்லை. அங்கு அனுமதியின்றி கட்டிடங்கள் ஏதும் கட்டப்படவில்லை.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com