சர்க்கரை விலை உயர்வு குறித்து ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் காமராஜ்

சர்க்கரை விலை உயர்வு குறித்து ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை விலை உயர்வு குறித்து ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது: அமைச்சர் காமராஜ்
Published on

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் 1-ம் தேதி முதல் சர்க்கரை விலை கிலோ 25 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சர்க்கரை விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வசிக்கும் 18.64 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.13.50 என்ற விலையிலேயே சர்க்கரை விற்பனை செய்யப்படும்.

இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 836 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது. மேலும் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுவதில்லை.


சர்க்கரை விலை உயர்வு குறித்து மு.க.ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் தி.மு.க. எம்.பி.க்கள் தான்.

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருள்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com