அ.தி.மு.க. அணிகள் இணைவதில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அ.தி.மு.க. அணிகள் இணைவதில் உறுதியாக இருக்கிறோம்: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

அ.தி.மு.க. அணிகள் இணைவதற்காக அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதாக ஓ.பன்னீர் செல்வம் கூறி இருந்தார்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்று பொதுமக்களும், கட்சியினரும் விரும்புகிறார்கள்.

எனவே இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த முடிவில் மாற்றம் எதுவும் இல்லை.

கேள்வி:- இணைப்பு முயற்சியில் நிபந்தனை எதுவும் விதிக்கப்பட்டதா?

பதில்:- இதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறுகையில், “அணிகள் இணைப்புக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையின் பேரிலேயே குழு அமைக்கப்பட்டது. தற்போது ஓ.பி.எஸ். அணி சார்பில் அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்தே கருத்து தெரிவிக்கப்படும்” என்றார்.

வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் தெரிவிக்கையில், “இது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. கட்சியில் மூத்த நிர்வாகியும், மாவட்டத்தின் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கருத்தே எங்கள் கருத்தாகும்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com