

அ.தி.மு.க. இணைப்பு குறித்து நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
எங்களை பொறுத்தவரை ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியும், கட்டிக்காத்த கட்சியும் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
அதற்கான பேச்சு வார்த்தைக்கு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால் ஓ.பி.எஸ். தரப்பில் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்தை சொல்லி முரண்பாடாக பேசி வருகிறார்கள். அவர்கள் ரெடி என்றால் உடனடியாக நாங்களும் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் தடங்கலுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று கேட்டதற்கு எங்கள் தரப்பில் ஏதும் இல்லை. அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டதற்கு ‘இன்னும் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை. அதற்கு நான் என்ன சொல்ல முடியும்?’ என்றார்.