கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய்-சேய் நல பெட்டகம்- அமைச்சர் தகவல்

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய்-சேய் நல பெட்டக திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய்-சேய் நல பெட்டகம்- அமைச்சர் தகவல்
Published on

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை வழங்குவது குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமைச்சர் விஜய பாஸ்கர் அளித்த பதில் வருமாறு:-

கர்ப்பிணி பெண்களுக்கு 3 தவணைகளாக ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டது. தற்போது அது ரூ.18 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை பாதிப்பை தவிர்ப்பதற்காக அவர்களுக்கு ‘மதர் மிக்ஸ்’ பேரீச்சம் பழம், இரும்பு சத்து டானிக், மற்றும் சத்து பொருட்கள் ஆகியவை அம்மா தாய் சேய் நலப் பெட்டகம் என்ற பெயரில் வழங்கப்பட உள்ளது. முதல்- அமைச்சர் இத்திட்டத்தை விரைவில் தொடங்கி வைப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com