அமைச்சர் சி.வி.சண்முகமும் ஆஸ்பத்திரிக்கு சென்றதால் பரபரப்பு

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் சிவி சண்முகம்
அமைச்சர் சிவி சண்முகம்
Published on

சென்னை:

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி அனுமதிக்கப்பட்ட நேரத்தில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் அங்கு சிகிச்சைக்காக வந்தார். ஏற்கனவே, சி.வி.சண்முகம் கடந்த மாதம் 21-ந் தேதி மூச்சு திணறல் பிரச்சனையால் சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், நேற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனையால்தான் அவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார் என்று கூறப்படுகிறது. அது தொடர்பாக, அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், கொரோனா பரிசோதனையும் நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் முடிவு வெளிவந்த பிறகே உண்மைநிலை தெரியும். என்றாலும், அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்றே பரிசோதனையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com