புதுவையில் இருந்து சென்னைக்கு மினிவேனில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது

புதுவையில் இருந்து சென்னைக்கு மினிவேனில் மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவையில் இருந்து சென்னைக்கு மினிவேனில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
Published on

சேதராப்பட்டு:

கோட்டக்குப்பம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட அனிச்சங்குப்பம் கலால் சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினிவேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த வேனில் லோடு ஏற்றிச்செல்வது போல் தார்ப்பாயினால் மூடப்பட்டு இருந்ததை பிரித்து பார்த்த போது அதில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது. அதில் 4272 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள், 120 பீர்பாட்டில் உள்பட 4668 பிராந்தி பாட்டில்கள் இருந்தது.

இதையடுத்து மினிவேனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புதுப்பட்டு ரங்கநாதன் நகரை சேர்ந்த முனியாண்டி (வயது36) என்பதும் மதுப்பாட்டில்களை புதுவையில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து முனியாண்டியை கைது செய்த போலீசார் மதுப்பாட்டில்களையும், மினிவேனையும் மரக்காணம் கலால் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com