காஷ்மீர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி - மற்றொருவர் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் பரிதாபமாக பலியானதுடன், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காஷ்மீர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் பலி - மற்றொருவர் படுகாயம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் பரிதாபமாக பலியானதுடன், மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை குடியிருப்பு பகுதியில் இன்று காலை நுழைந்த தீவிரவாதிகள் அங்கு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் ஹோன்மோ பகுதியைச் சேர்ந்த யாஸ்மீனா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சீர் ரால் பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com