திருக்கனூர் அருகே நள்ளிரவில் வங்கியை நோட்டமிட்டவர் கைது

திருக்கனூர் அருகே நள்ளிரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வங்கியை நோட்டமிட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

திருக்கனூர்:

திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவு 2 மணியளவில் திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு பாரதியார் கிராம கூட்டுறவு வங்கி அருகே ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக ஒருவர் வங்கியை நோட்டமிட்டபடி இருந்ததை போலீசார் கண்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 42) என்பது தெரிய வந்தது. ஆனால், நள்ளிரவில் வங்கியை நோட்டமிட்டது குறித்து விசாரித்த போது, சிவக்குமார் முன்னுக்குப்பின் முரணான தக வலை கூறினார்.

இதையடுத்து சிவகுமாரை கைது செய்த போலீசார் வங்கியில் கொள்ளையடிக்கும் நோக்கில் சுற்றித்திரிந்தாரா? அல்லது வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க திட்ட மிட்டு மண்ணாடிப்பட்டுக்கு வந்தாரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com