நடுகடலில் மீன் பிடித்தபோது படகில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி

நடுகடலில் மீன் பிடித்தபோது படகில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுகடலில் மீன் பிடித்தபோது படகில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி
Published on

ராயபுரம்:

திருவொற்றியூர் புதுமண குப்பத்தைச் சேர்ந்தவர் விஜய். மீனவர். இவர் கடந்த 25-ந்தேதி படகில் சிலருடன் மீன் பிடிக்க சென்றார்.

கடலுக்குள் தங்கி மீன் பிடிப்பதற்காக தேவையான உணவு, தண்ணீர் மற்றும் வெளிச்சத்தை இன்வெட்டர் ஆகியவற்றை எடுத்து சென்று இருந்தனர்.

நேற்று ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது விஜய் இன்வெட்டரை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடலுடன் மீனவர்கள் காசிமேடு துறைமுகத்துக்கு வந்தனர். போலீசார் விஜய் உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com