கருணாநிதியுடன் மீரா குமார் சந்திப்பு: உடல்நலம் விசாரித்தார்

ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார், சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
கருணாநிதியுடன் மீரா குமார் சந்திப்பு: உடல்நலம் விசாரித்தார்
Published on

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவ்வகையில், இன்று சென்னை வந்த அவர், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து இன்று ஆதரவு திரட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய மீரா குமார், கொள்கை அடிப்படையிலேயே கட்சிகள் தன்னை ஆதரிப்பதாகவும், 17 கட்சிகள் ஒருமனதாக தன்னை வேட்பாளராக தேர்வு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com