காஷ்மீர்: மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக மெகபூபா முப்தி ஆறாவது முறையாக தேர்வு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவராக முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆறாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Published on

காஷ்மீர்:

ஐம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் ஐனநாயக கட்சியின் தலைவராக மெகபூபா முப்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஆறாவது முறையாக முப்தி தலைவர் பதவியை பெற்றுள்ளார். மாநிலத்தின் முதல் பெண் முதல்-மந்திரியான மெகபூபா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகித்த முப்தி முகமது சயீத் திடீர் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7–ந் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அங்கு புதிய அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டதால் ஜனாதிபதி ஆட்சி அமலானது.

இதையடுத்து, முப்தி முகமது சயீத்தின் மகள் மெகபூபாவின் இல்லத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூடி, மெகபூபாவை முறைப்படி சட்டசபை கட்சி தலைவராக (முதல் மந்திரியாக) ஒரு மனதாக தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com