மீன்சுருட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது

மீன்சுருட்டி அருகே மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வளையாபதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி மெயின் ரோடு தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது 36) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானம் விற்றுக்கொண்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்து, அவரிடமிருந்து 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன்(61) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மதுபானம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 3 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com