செய்துங்கநல்லூரில் ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

வல்லநாட்டில் இருந்து கலியாவூருக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க கோரி மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Published on

செய்துங்கநல்லூர்:

வல்லநாட்டில் இருந்து கலியாவூருக்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்து உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும், கோணார் குளம் - சிங்காத்தாக்குறிச்சி சாலையை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி செய்துங்கநல்லூரில் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ், அவை தலைவர் மத்தேயு ஜெபசிங், விவசாய அணி செயலாளர் சிவஞானவேல், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பால்ராஜ், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரஞ்சன், திருவை கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருங்குளம் ஒன்றிய செயலாளர் காலங்கரை கந்தசாமி வரவேற்றார். மாநில கொள்கை விளக்க செயலாளர் அழகுசுந்தரம் சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றிய அவைத்தலைவர் பெருமாள், ஒன்றிய துணைச் செயலாளர் ஆத்தியப்பன், கால்வாய் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com