ராஜபாளையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Published on

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள மேலராஜகுலராமன் கிராமத்தில், ஆனந்தம் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா அடங்கல், குடும்ப தலைவர் இறப்பு நிதி உள்ளிட்ட சான்றிதழ் வழங்குவதற்கு இவர் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அய்யனாபுரம் பேருந்து நிறுத்தம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அந்த பகுதியை சேர்ந்த 30 பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com