

மழை குறுக்கிட்டதால் மறுநாள்(10ம் தேதி) ஆட்டம் ரிசர்வ் செய்யப்பட்டது. இதனையடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இறுதியில் இந்தியா தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் டோனி-ஜடேஜா கூட்டணி சிறந்த முறையில் இருந்தது. நியூசிலாந்து வீரர் குப்திலால் டோனி, நூலிழையில் ரன் அவுட் ஆனார். இதனால் இந்தியா வெற்றிப் பெறும் என்கிற இந்தியர்களின் கனவு தகர்ந்தது.
பந்து கைக்கு வந்தவுடன் ஸ்டெம்பை நோக்கி வேகமாக வீசினேன். எங்கள் நேரம், அது நேராக ஸ்டெம்பில் பட்டுவிட்டது. இதனால் டோனி ரன் அவுட் ஆனது எங்கள் அணிக்கு மிகச்சிறந்த லக்தான்’ என கூறினார்.
இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்ததற்கு ரசிகர்களின் வேதனை என்னவோ, அதேபோல் டோனியின் ரன் அவுட் குறித்து கடந்த 3 நாட்களாக வேதனையில்தான் உள்ளனர்.