மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்- மகாராஷ்டிரா அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட்டு மராத்திய சமூகத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு செல்லும் என்று கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இட ஒதுக்கீடு செல்லும் என்ற மும்பை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்தார். அப்போது இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com