மனோகர் பாரிக்கர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி - நாளை புதிய முதல்-மந்திரி தேர்வு

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் புதிய முதல்-மந்திரி நாளை தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #manoharparrikar
மனோகர் பாரிக்கர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி - நாளை புதிய முதல்-மந்திரி தேர்வு
Published on

புதுடெல்லி:

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. அவரது உடல்நிலை பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

இதற்கிடையே கோவா மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் பனாஜியில் நிருபர்களிடம் கூறுகையில் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை. எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த அமைச்சரிடம் வழங்க வேண்டும் என்றார்.

அவர் முதல்-மந்திரியை மாற்ற வேண்டும் என்று கூறுவதால் அதுபற்றி பா.ஜனதா மேலிடம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. டெல்லி ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்படும் முன் மனோகர் பாரிக்கர் பனாஜியில் இருந்து பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுடன் டெலிபோனில் பேசினார். இதில் முதல்-மந்திரி பொறுப்புகளை மூத்த மந்திரிக்கு வழங்குவது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நாளை பனாஜியில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புதிய முதல்-மந்திரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. புதிய முதல்- மந்திரி பதவிக்கு சபாநாயகர் பிரமோத் சவந்த், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ, பொதுப் பணித் துறை மந்திரி சுதின் தவாலிகர் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.

கோவாவில் தற்போதுள்ள நிலையில் காங்கிரஸ் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சிக்காது என்று மாநில காங்கிரஸ் தெரிவித்துள்ளது. #manoharparrikar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com