முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் காலமானார்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் இன்று காலமானார். #DhananjayKumar
முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் காலமானார்
Published on

மங்களூரு:

கர்நாடக மாநிலம் தட்டிசண கன்னட மாவட்டம் வேணூரைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (வயது 67). முன்னாள் மத்திய மந்திரியான இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

அவரது உடல் காத்ரி கம்பாலா பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதன்பின்னர் சொந்த ஊரான வேணூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.

1983ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய தனஞ்செய் குமார், எம்எல்ஏ, எம்பி என அடுத்தடுத்து உயர்ந்தார். மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார். இடையில் எடியூரப்பா, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியபோது அக்கட்சியில் தனஞ்செய் குமார் இணைந்தார். எடியூரப்பா பாஜகவில் இணைந்தபோது, தனஞ்செய் அக்கட்சியில் இணைவதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் காங்கிரசில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. #DhananjayKumar 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com