21-ம் நூற்றாண்டிலும் இந்த கொடுமைகளா? - பெண் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய தந்தை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2-வது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, தனது முதல் பெண் குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிவீசியுள்ளார். #UttarPradesh
21-ம் நூற்றாண்டிலும் இந்த கொடுமைகளா? - பெண் குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய தந்தை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் பாரியெல்லி பகுதியில் வசிக்கும் அரவிந்த் கங்வார் என்பவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஏற்கனவே மூத்த குழந்தையும் பெண் குழந்தையாக இருந்ததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், நேற்று மாலை, தனது வீட்டின் மாடியில் இருந்து தனது ஒன்றரை வயது மூத்த மகளை தூக்கி வீசியுள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் அவரது தாய்க்கும் காயம் பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் படுகாயங்களுடன் தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் அரவிந்தை கைது செய்து கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் சுயமாக தங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் காலச்சூழலில், இப்போது கூட இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண் சிசுக்கொலை நடந்து வருவதும், பெண் பிள்ளைகள் பெறுவதற்கு அஞ்சும் சூழல் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. #UttarPradesh

X

Maalai Malar
www.maalaimalar.com