பீகாரில் தங்கையை கடத்த முயன்றவர்களை தடுத்தவர் மீது துப்பாக்கிச்சூடு

பீகாரில் தங்கையை கடத்த முயன்றவர்களை தடுத்த சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் தங்கையை கடத்த முயன்றவர்களை தடுத்தவர் மீது துப்பாக்கிச்சூடு
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் மதேபூரா மாவட்டத்தில் நேற்று இரவு ரிஷி தேவ் என்பவர் வீட்டிற்குள் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் வீட்டில் இருந்த ரிஷி தேவின் சகோதரியை கடத்திச் செல்ல முயன்றனர். இதனை ரிஷி தேவ் தடுத்தார். அதனால் கோபமடைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் படுகாயமடைந்த ரிஷி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ரிஷியின் உறவினர் ஒருவருக்கு கழுத்தில் குண்டு பாய்ந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் சொத்து தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஜால் ரிஷி தேவ் மற்றும் அவரது மனைவி ருபி தேவ்ல் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கையை கடத்த முயன்றவர்களை தடுத்த சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com