விபத்தில் துண்டான காலை நோயாளிக்கு தலையணையாக வைத்த மருத்துவமனை

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜான்சி மருத்துவமனையில் கால் துண்டிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நோயாளியிக்கு தலையணையாக துண்டான காலை வைத்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் துண்டான காலை நோயாளிக்கு தலையணையாக வைத்த மருத்துவமனை
Published on

பாட்னா:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மவுரானிபூர் அருகே நேற்று பள்ளி பேருந்து - லாரி விபத்தில் பேருந்தின் உதவியாளர் கான்ஷ்யாமின் கால் துண்டானது. இதனை அடுத்து, அவர் ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை கட்டிலில் படுக்கவைக்கப்பட்ட போது, துண்டிக்கப்பட்ட காலை அவருக்கு தலையணையாக மருத்துவமனை ஊழியர்கள் வைத்துள்ளனர். இதனை அடுத்து, காஷ்யாமின் குடும்பத்தினர் தலையணை ஒன்று வாங்கி வந்தனர். ஆனால், அதனை வெட்டுப்பட்ட காலின் கீழ் ஊழியர்கள் வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வு உள்ளுர் ஊடகங்களில் செய்தியாக வெளியானதை அடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com