தம்பிக்கு அரசு வேலை கிடைத்த பொறாமையால் வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் - 4 பேர் பலி

மேற்கு வங்காளம் மாநிலத்தில் தம்பிக்கு அரசு வேலை கிடைத்த பொறாமையால் வீட்டுக்கு அண்ணன் தீ வைத்த சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். #Mansetsafire #brothergettinggovtjob
தம்பிக்கு அரசு வேலை கிடைத்த பொறாமையால் வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் - 4 பேர் பலி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள மடன்டோலா கிராமத்தை சேர்ந்தவர், கெடு மொன்டல். இவருடைய 4 மகன்களும் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். தேசிய தன்னார்வலர் படையில் பணியாற்றிவந்த கெடு மொன்டல் தனது பணிக்காலத்தின்போது சமீபத்தில் மரணம் அடைந்தார்.

கெடு மொன்டலின் மறைவுக்கு பின்னர் அவரது இளைய மகன் கோபின்டா மொன்டல் என்பவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்பட்டது. தனக்கு கிடைக்காமல் தம்பிக்கு மட்டும் அரசு வேலை கிடைத்ததால் கெடு மொன்டலின் மகன்களில் ஒருவரான மக்கான் மொன்டல்(30) என்பவர் ஆத்திரம் அடைந்தார்.

நேற்றிரவு, மடன்டோலா கிராமத்தில் உள்ள கெடு மொன்டலின் பூர்வீக வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். மனஉளைச்சலில் இருந்த மக்கான் மொன்டல்(30) திடீரென்று வீட்டின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதில் உள்ளே இருந்த கோபின்டா(28) அவரது மூத்த சகோதரர் பிகாஷ் மொன்டல்(32) மூன்று மற்றும் ஒன்றரை வயது குழந்தைகளான கோபின்டாவின் இரு மகள்கள் ஆகிய 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பிகாஷ் மொன்டலின் மனைவி, மகன், மகள் மற்றும் கோபின்டா மொன்டலின் மனைவி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மால்டா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மனிக்ச்சக் காவல் நிலைய போலீசார், தலைமறைவாக இருக்கும் மக்கான் மொன்டலை கைது செய்வதற்காக தேடி வருகின்றனர். #Mansetsafire #brothergettinggovtjob

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com