ஒட்டன்சத்திரத்தில் பஸ்சில் வந்த பயணியிடம் பணம் திருடியவர் கைது

ஒட்டன்சத்திரத்தில் பஸ்சில் வந்த பயணியிடம் பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் அத்திக்கோம்பையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 36). இவர் தனது நண்பருடன் ஒட்டன் சத்திரத்துக்கு பஸ்சில் வந்தார். ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் அவர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது பையில் இருந்த ரூ.500 பணத்தை மர்ம நபர் நைசாக திருடினார்.

இதை பார்த்த சுரேஷ்குமார் அந்த நபரை கையும் களவுமாக மடக்கி பிடித்தார். பின்னர் அவரை ஒட்டன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சுரேஷ்குமாரிடம் பணம் திருடியது கோவை பீளமேடு சவரிபாளையத்தைச் சேர்ந்த பாலாஜி என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வேறு திருட்டு வழக்குகள் உள்ளனவா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com