

கொல்கத்தா:
தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார்.
தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில கட்சிகளின் ஒற்றுமை மற்றும் மத்திய அரசுடன் பலமான நட்புறவுக்கு தி.மு.க. எப்போதுமே துணையாக நின்றுள்ளது. பா.ஜ.க.வின் சர்வாதிகார - ஜனநாயகவிரோத ஆட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா பானர்ஜியின் பெருமுயற்சிகளுக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். எங்களது முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். #tamilnews #mamata #mkstalin