

கொல்கத்தா:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. 60 சட்டசபை தொகுதிகள் கொண்ட மாநிலத்தில் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
இன்று காலை 8 மணிக்கு திரிபுராவில் பதிவான ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்தது. அதன்பின், நேரம் செல்ல செல்ல பா.ஜனதா கடும் நெருக்கடி கொடுத்து அந்த கட்சியை பின்னுக்கு தள்ளியது. இறுதி நிலவரப்படி பா.ஜ.க. 35 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து, திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் உரிமை பெற்றது அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், திரிபுராவில் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பா.ஜ.க.விடம் சரணாகதி அடைந்துள்ளது என மம்தா பானர்ஜி கேலி
செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுராவில் பாஜக பெற்றுள்ள வெற்றி எனக்கு விடப்பட்ட சவாலாக கருதுகிறேன். எனவே நான் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன்.
திரிபுராவில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரின் பிரசாரத்தை மா, கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பா.ஜ.க.வை எதிர்த்து போராடும் வீரமும் ஆற்றலும் இழந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் திரிபுரா மாநிலத்தில் அக்கட்சியிடம் சரணாகதி அடைந்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார். #tamilnews