

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்ற இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவாக பேசினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்ததின் நோக்கம் குறித்தும், இரு அணிகளும் இணைப்புக்கான சூழல் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன் கூறியதாவது:-