உ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது

உத்தரப்பிரதேசத்தில் இருதரப்பினர் மோதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
மோதல் ஏற்பட்டகிராமம்
மோதல் ஏற்பட்டகிராமம்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இந்த மோதலில் 3 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில் நிலப்பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், உ.பி.யில் இருதரப்பினர் மோதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்துவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com