மும்பையில் கனமழை: விமான நிலையம் மூடப்பட்டதால் விமான சேவை பாதிப்பு

மராட்டிய மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாடு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
மும்பையில் கனமழை: விமான நிலையம் மூடப்பட்டதால் விமான சேவை பாதிப்பு
Published on

மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ரெயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.மேற்கு மற்றும் மத்திய ரெயில்வேயின் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரெயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. பிரதான ஓடுதளம் மூடப்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவா, பெங்களூர், டெல்லி, ஐதராபாத்துக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும், 56 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பைக்கு செல்ல வேண்டிய 10க்கு மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com