மயிலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

மயிலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலம் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி
Published on

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள நெடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 49). தொழிலாளி. இவர் நெடி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக சாலையோரம் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் செல்வமணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வமணி பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வ மணி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான செல்வமணிக்கு கலை செல்வி என்ற மனனவியும் நாரயணன் என்ற மகனும் உள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com