மன்னர் ஆட்சிக்காலமா?: சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் புகுந்த மந்திரி

5 பேரை கொன்ற சிறுத்தையை வேட்டையாட மகாராஷ்டிர மாநில பா.ஜ.க. மந்திரி கைத்துப்பாக்கியுடன் காட்டுக்குள் புகுந்த காட்சி வீடியோ வடிவில் வைரலாக பரவி வருகிறது.
மன்னர் ஆட்சிக்காலமா?: சிறுத்தையை வேட்டையாட துப்பாக்கியுடன் காட்டுக்குள் புகுந்த மந்திரி
Published on

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம், ஜலகான் மாவட்டம், சலிஸ்கான் பகுதியில் சிறுத்தை புலியின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டைவிட்டு ஊருக்குள் புகுந்த ஒரு சிறுத்தை கடந்த ஒன்றரை மாதத்தில் 5 பேரை கொன்றுள்ளது. ரத்தவெறியுடன் அலையும் அந்த சிறுத்தையை கொல்ல வனக்காவலர்களை கொண்ட சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்மாவட்டத்தின் வழியாக மகாராஷ்டிர மாநில மந்திரி கிரிஷ் மஹாஜன் தனது வாகன அணிவகுப்பு பரிவாரங்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது காரில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் தேடப்படும் சிறுத்தை உலவி கொண்டிருப்பதை கண்ட அவர், உடனடியாக காரைவிட்டு தனது கைத்துப்பாக்கியை உருவியவாறு வனக்காவலர்களுடன் சிறுத்தை வேட்டக்கு தயாரானார்.

மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரிசபையில் அவருக்கு மிகவும் நெருக்கமான நபராக கருதப்படும் கிரிஷ் மஹாஜன், முன்னர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உறவினர் திருமண விழாவில் கலந்து கொண்டமைக்காக சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மன்னர் ஆட்சிக் காலம்போல் ஊருக்குள் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கொல்ல கைத்துப்பாக்கியுடன் மந்திரி களமிறங்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com