மதுரவாயலில் பைக் திருடன் என்று நினைத்து வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல்

மதுரவாயலில் பைக் திருடன் என்று நினைத்து வாலிபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சிறுவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர்:

மதுரவாயல் அபிராமி நகர் மெயின் ரோட்டில் கடந்த 15-ந் தேதி அதிகாலை அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்த பிரவின்குமார் (21) என்பவர் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் கிடந்தார். இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் பிரவின் குமாரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாட்டர் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வரும் பிரவீன்குமார் கடந்த 14-ந் தேதி இரவு மதுரவாயலில் உள்ள நண்பர் மோகனை பார்க்க வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது கை வைத்தபடி காத்து நின்றார்.

இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பிரவீன் குமாரை மோட்டார் சைக்கிள் திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன், சார்லஸ் (எ) கார்த்திகேயன், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஷியாம் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 3 பேர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலிசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com