மதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய 5 பேர் கைது

மதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

மதுரை:

மதுரை ஆழ்வார்புரம் வைகை வடகரை பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன்(வயது 25) என்பவரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். அந்த கடனை கொடுக்காததால் ஆத்திரத்தில் சரவணன், அவரது நண்பர்கள் மணிபாண்டி, அழகுபாண்டி, நாகபாண்டி, கண்ணன் ஆகிய 5 பேர் சேர்ந்து விஜயனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர்.

பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயனை குத்தி விட்டு தப்பி விட்டனர். இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com