மதுரை அருகே காரில் கடத்திய எரிசாராயம் பறிமுதல் - 2 பேர் கைது

மதுரை அருகே காரில் கடத்தப்பட்ட எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
மதுரை அருகே காரில் கடத்திய எரிசாராயம் பறிமுதல் - 2 பேர் கைது
Published on

பேரையூர்:

மதுரை மாவட்ட தனிப்பிரிவு போலீசார் திருமங்கலம் அருகே உள்ள திரளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

காரில் வந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து காருக்குள் சோதனை நடத்திய போது எரிசாராயம் கடத்தப்படுவது தெரியவந் தது. காரில் இருந்த 480 எரிசாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையைச் சேர்ந்த ராஜாமணி மகன் துளசி (வயது 37), மதுரை கே.புதூர் காளிதாஸ் மகன் கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

எரிசாராயம் எங்கு தயாரிக்கப்பட்டது? அதனை எங்கு கடத்துகிறார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com