தேர்தல் பணியில் டிஜிபி ஈடுபடுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம்- மதுரை ஐகோர்ட்

தேர்தல் பணியில் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஈடுபடுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
தேர்தல் பணியில் டிஜிபி  ஈடுபடுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம்- மதுரை ஐகோர்ட்
Published on

மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்.

டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு செய்த அவர் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டால் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி செயல்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டி.ஜி.பி. ராஜேந்திரன் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க முடியாது. மனுதாரர் தனது கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடமே முறையிடலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com