

விருதுநகரைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 1 கோடி பேருக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. மதுபோதையால் விபத்து மற்றும் பல்வேறு நோய்களால் வருடந்தோறும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
2016-ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் முழுவதும் மூடப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.
எனவே அ.தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி 2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் எத்தனை மது உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன?
ஆண்டுதோறும் எவ்வளவு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகிறது? அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி 2020-ம் ஆண்டுக்குள் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.