

மதுரை:
மதுரை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
நேற்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ஆண்டிபட்டியில் 15 செ.மீ. மழை பதிவானது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது.
தொடர்ந்து மழை பெய்தால் விவசாயம் செழிக்கும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையளவு விவரம் வருமாறு:-
சிட்டம்பட்டி-3 மி.மீ.
கள்ளந்திரி-2 மி.மீ.
தனியாமங்கலம்-10 மி.மீ.
மேலூர்-1.30 மி.மீ.
சாத்தையாறு- 74 மி.மீ.
வாடிப்பட்டி-118 மி.மீ.
திருமங்கலம்-40 மி.மீ.
உசிலம்பட்டி-10 மி.மீ.
தல்லாகுளம்-1 மி.மீ.
விமான நிலையம்-4மி.மீ.
இடையப்பட்டி-15 மி.மீ.
சோழவந்தானில் 2 மி.மீட்டர் மழையும், மேட்டுப்பட்டியில் 36 மி.மீட்டரும், கள்ளந்திரி 6 மி.மீட்டர், ஆண்டிப்பட்டியில் 152 மி.மீட்டர் (15 செ.மீ.) மழை பதிவாகி உள்ளது.
நேற்று மதுரை மாவட்டத்தில் மொத்தம் 480 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரி 24 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.