ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
ஸ்டெர்லைட் நிறுவனம்
ஸ்டெர்லைட் நிறுவனம்
Published on

சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், ஆலையை மீண்டும் திறக்க கோரியும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com