தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமானி மேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி தன் பதவியை கடந்த 6-ந் தேதி ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் சார்பில் கடந்த 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com