மரணம்
மரணம்

மாதவரம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி

மாதவரம் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

செங்குன்றம்:

வியாசர்பாடி” சி” கல்யாண புரத்தைச் சேர்ந்தவர் முருகன்(42). இவர் மாதவரம் பால் பண்ணை மாத்தூர் எம். எம்.டி.ஏ. பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார் நேற்று அப்பகுதியில் மின் பராமரிப்பு பணி நடை பெற்றது. மின்சாரத்தை தடை செய்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி கம்பத்தில் சிக்கிக்கொண்டார். மணலி தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றினர்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இறந்து போன முருகனுக்கு அம்மு (35) என்ற மனைவியும், ஹாசினி (11), சௌமியா (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com