திருவள்ளூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

திருவள்ளூர் அருகே கர்ப்பிணி மனைவியுடன் பைக்கில் சென்றபோது லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான செல்வம்.
பலியான செல்வம்.
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கீழ் நல்லாத்தூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 34) கூலித் தொழிலாளி.

இவரது மனைவி சங்கீதா. தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது மகள் ராஜகுமாரி (2). நேற்று இரவு முதல் குழந்தை ராஜகுமாரிக்கு உடல்நிலை சரியில்லை. இதையடுத்து இன்று காலை செல்வம் தனது மனைவி மற்றும் குழந்தை யுடன் மோட்டார் சைக்கிளில் கீழ்நல்லாத்தூரில் இருந்து திருவள்ளூர் மருத்துவ மனைக்கு வந்து கொண்டு இருந்தார். 

மணவாளநகர் அருகே வந்தபோது எதிரே ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சிலிண்டர் ஏற்றிச் சென்றலாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மனைவி கண் முன்பே செல்வம் பலியானார். அவரது மனைவி சங்கீதா, குழந்தை ராஜகுமாரி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com