கள்ளக்குறிச்சியில் லாரிகள் மோதல்- டிரைவர் பலி

கள்ளக்குறிச்சியில் லாரிகள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

கள்ளக்குறிச்சி:

நாமக்கல் மாவட்டம் செம்மகுளம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் தனசேகர் (வயது29). லாரி டிரைவரான இவர் நேற்று சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த இன்னொரு லாரியின் டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் அந்த லாரியின் பின்னால் தனசேகர் ஓட்டி வந்த லாரி பயங்கரமாக மோதியது. 

இதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தனசேகரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் தனசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். 

விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com