54 ஆண்டுகள் உயிருக்கு போராடிய ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்

இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 54 ஆண்டுகளாக உயிருக்கு போராடிய ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
54 ஆண்டுகள் உயிருக்கு போராடிய ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்
Published on

இங்கிலாந்தில் வடக்கு லானார்க்ஷிர் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் மோரிஸ் (75). இவர் இங்கிலாந்து ராணுவத்தில் ஸ்காட்லாந்து துப்பாக்கி படை பிரிவில் வீரராக பணிபுரிந்தார்.

கடந்த 1962-ம் ஆண்டில் தனது 21-வது வயதில் ஜெர்மனியில் பணியில் இருந்த போது கார் விபத்தில் சிக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது. தொடை எலும்பிலும் முறிவு ஏற்பட்டது.

எனவே, அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபரேசன் செய்த போது திடீரென இருதய அடைப்பும், மூளையில் கோளாறும் ஏற்பட்டு செயல்பாடும் நின்று போனது.

எனவே, அவரை இங்கிலாந்தின் லனார்க் ஷிரில் இருக்கும் ஏர்டிரி நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 54 ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com