நிரவ் மோடியின் ஜாமீன் மனு 7-வது முறையாக தள்ளுபடி - இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 7வது முறையாக இங்கிலாந்து கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
நிரவ் மோடி
நிரவ் மோடி
Published on

லண்டன்:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலமாக ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த சூழலில் தனக்கு ஜாமீன் கேட்டு நிரவ் மோடி சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து 7-வது முறையாக மீண்டும் அவரது சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய ஆதாரங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிரவ் மோடி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி சாமுவேல் கூஸ், நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை நேற்று தள்ளுபடி செய்தார்.

இது சி.பி.ஐ. தரப்புக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சி.பி.ஐ., வெளியுறவு அமைச்சகம் மற்றும் இங்கிலாந்து சட்டப்பணிகள் குழு ஆகியவற்றின் சிறப்பான ஒருங்கிணைப்பால் நிரவ் மோடியின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதாக சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com