பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன்

பாரதிய ஜனதா சார்பில் இந்தூரில் நடைபெற்ற மோடியின் ‘நான் ஒரு காவலன்’ என்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பங்கேற்கவில்லை. #LokSabhaElections2019 #BJP #SumitraMahajan
பாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
Published on

பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.

அவர் 8 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்துஎம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார்.

ஆனால் இந்த தடவை அவருக்கு பாரதிய ஜனதாவில் டிக்கெட் கொடுக்கப்படவில்லை. சுமித்ரா மகாஜனுக்கு தற்போது 75 வயதாகிறது. வயதை காரணம் காட்டி அவருக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களுக்கும் டிக்கெட் வழங்கவில்லை. அந்த வரிசையில் சுமித்ரா மகாஜனையும் சேர்த்து விட்டனர்.

டிக்கெட் வழங்காததால் சுமித்ரா மகாஜன் கடும் அதிருப்தியில் இருக்கிறார். பாரதிய ஜனதா சார்பில் இந்தூரில் மோடியின் ‘நான் ஒரு காவலன்’ என்ற நிகழ்ச்சி நடந்தது.

சுமித்ரா மகாஜன் கலந்து கொள்ளாததால் அவர் கட்சியில் அதிருப்தியாக இருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com