உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் 713 பேர் விருப்ப மனு

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் 713 விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
அதிமுக
அதிமுக
Published on

திருவள்ளூர்:

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்க தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் குவிந்தனர்.

இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களான மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான பலராமன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால், மாநில இளைஞரணி இணை செயலாளர் செவ்வை சம்பத் குமார் ஆகியோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

இது குறித்து மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் கூறியதாவது:-

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு 56 பேரும், ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 383 பேரும், நகர் மன்றத் தலைவர் பதவிக்கு 9 பேரும், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு 82 பேரும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு 18 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 165 பேர் என மொத்தம் 713 விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

இந்த விருப்ப மனு விநியோகம் செய்ததன் மூலம் ரூ.20.61 லட்சம் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதேபோல், இன்றும் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com